Posts

Showing posts from August, 2018

வையத்து வாழ்வீர்காள் ...25

மூடனின் பிரச்சாரம் விதுரர் கூறுகிறார் -> ஒரு மூடன் நல்லவர்களை நோக்கி பொய் பிரச்சாரங்கள் செய்கிறான். விஷமத்தனமான செய்திகளை பரப்புகிறான். இதன் வாயிலாக அவன் நல்லவர்களை துன்புறுத்தியதற்கான பாவத்தை சம்பாதிக்கிறான். நல்லவர்களா தாங்கள் தெரியாமல் செய்த தவறினால் சம்பாதித்த பாவங்களில் இருந்து மன்னிப்பு பெறுகின்றனர். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...18

மூடனின் ஆசை: விதுரர் கூறுகிறார் -> சாதாரணமாக ஒரு சில ஆசைகளை நாம் ஞாயமான ஆசைகள் என்று கூறக்கேட்டிருப்போம். மூடன் எதன் மீது எல்லாம் ஆசை கொள்ளக் கூடாதோ அதன் மீது ஆசை கொள்பவனாய் இருக்கிறான். ஞாயமான ஆசைகளில் அவன் மனம் செல்வதில்லை. அது மட்டும் இன்றி வலிமையானவருடன் தேவையில்லாத பகை உணர்ச்சி கொண்டு அவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்த எந்த விதமான தவறையும் செய்வதற்கு தயாராக இருக்கிறான். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...19

மூடன் காணும் நட்பு விதுரர் கூறுகிறார்-> மூடன் சரியான நண்பர்களை தேர்ந்தெடுப்பதில்லை. எவர் அவனுக்கு உண்மையாகவே நன்மையை செய்கிறாரோ அவர்களை அவன் விரோதியாகவே பார்க்கிறான். எவர் அவனோடு இருந்து கொண்டு அவர்களுக்கு தவறானவற்றை போதித்து தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறாரோ அவரை நண்பர் என கொள்கிறான். நல்ல நட்பையும் மனிதரையும் துன்புறுத்த அவன் எத்தகைய தவறான செயலையும் செய்ய தயாராய் இருக்கிறான். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...20

மூடன் செயல் திறன் விதுரர் கூறுகிறார்-> ரகசியமாக வைத்திருக்க வேண்டியவற்றை ஒரு மூடன் அப்படி வைத்திருப்பது இல்லை. எவர் ஒருவர் எதற்கு எடுத்தாலும் சந்தேகப் படுவாரோ அத்தகையவரிடம் மூடன் ரகசியங்களை கூறி விடுகிறான். குறைந்த நேரத்தில் முடிக்க வேண்டிய செயல்களுக்கு மூடன் நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறான். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...21

மூடனின் பேச்சு: விதுரர் கூறுகிறார்-> மூடன் அழையா விருந்தாளியாக தன்னை அழைக்காத இடங்களுக்கு செல்கிறான். தன்னை யாரும் கேட்காத பொழுதே மிக அதிகமாக பேசுகிறான்.மிக மோசமான நபர்களிடம் நம்பிக்கை கொள்கிறான்.இப்படி பட்டவன் மனிதர்களில் அடிமுட்டாள் ஆகிறான். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...22

மூடன் புத்தி: விதுரர் கூறுகிறார்-> ஒரு மூடன் தான் செய்த தவறை அடுத்தவர் மீது திருப்பி விட்டு அவர்களின் மேல் சுமத்துகிறான் . தன்னிடம் சக்தி இல்லை என்கின்ற பொழுது தன் இயலாமையை அதீத கோபமாக ஆத்திரமாக வெளிப்படுத்துகிறான். (ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்பதை போல...) (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...23

மூடனின் முயற்சி. விதுரர் கூறுகிறார்-> எவன் ஒருவன் தன் பலம் என்ன என்பதனை அறியவில்லையா, எவன் ஒருவன் தர்மத்தில் இருந்து தன்னை முற்றிலுமாக விலக்கி வைத்துள்ளானோ, எவன் ஒருவன் அடியக்கூடிய இலட்சியங்கள் இல்லாமல் உள்ளானோ, எவன் ஒருவன் சீரிய முயற்சி இன்றி அடைய முடியாதவற்றின் மீதே ஆசை கொண்டுள்ளானோ அத்தகையவன் அறவே அறிவற்றவனாக ஆகிவிடுகிறான். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...24

மூடனின் போதனை மற்றும் நம்பிக்கை. விதுரர் கூறுகிறார்-> எவர் ஒருவர் எந்த விதமான விஷயத்தையும் கேட்பதற்க்கோ தெரிந்து கொள்வதற்கோ எப்பொழுதும் தயாராக இல்லையோ அவர்களிடம் ஒரு மூடன் போதனைகளை செய்ய முயலுகிறான். (செவிடன் காதில் சங்கு ஊதுதல், தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முயலுதல் என்றெல்லாம் நாம் சொல்வதை போல) அவர்களிடம் கற்பிக்க முயலுகிறான். எவர் ஒருவர் எந்த ஒரு செயலையும் செய்ய தயாராக இல்லையோ அவர்களுக்காக தன் நேரத்தை கொடுக்கிறான் மூடன். கஞ்சர்களிடம் நம்பிக்கை கொள்கிறான் மூடன் (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...17

மூடன் எத்தகையவன்? விதுரர் கூறுகிறார் -> மூடன் தன் விஷயங்களில் கூட சரியான கவனம் செலுத்துவதில்லை (சுய வளர்ச்சியில் கவனம், தனக்கான அற வாசிப்புகள் அல்லது உணர்வது தொடர்பான முயற்சி, தனக்கான நல்ல நட்பை நடவடிக்கையை வளர்த்துக் கொள்ளுதலில் கவனம் எதுவும் இல்லாது இருப்பது என வைத்துக் கொள்ளலாம்) , ஒரு பொதுவான விஷயம் விவாதிக்கப் படும் பொழுது அங்கே தன்னை மட்டுமே பொருத்தி பார்ப்பவனாக இருக்கிறான், மேலும் தனது நண்பர்களிடம் கூட உண்மையாய் இல்லாமல் ஏமாற்றவும் தயங்காதவனாக இருக்கிறான். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...16

பண்டிதரை பற்றிய அணைத்து குணங்களையும் தன்மைகளையும் பேசிய விதுரர் பிறகு அதற்க்கு நேர்மாறான மூடரின் குணங்கள் பற்றி கூறுகிறார். மூடன் என்பவன் யார்? விதுரர் கூறுகிறார் -> எவன் ஒருவன் நல்ல நூல்கள் பற்றி அறியாதவனாக இருக்கிறானோ, தர்ம சிந்தனைகள் அற்று அற வழி வாசிப்புகள் பற்றி எதுவும் தெரியாமல் ஆனால் தன்னை பற்றிய உயரிய மதிப்பு கொண்டுள்ளானோ, சுய லாபத்திற்காக தவறான வழிகளை பின்பற்றுகிறானோ அத்தகையவன் மூடன். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...15

பண்டிதன் தன்மை எப்படி அமைகிறது? விதுரர் கூறுகிறார் -> இவ்வாறு பல விஷய ஞானங்களை பெரும் பண்டிதன் தான் அடைந்த ஞானத்தால் செருக்கு கொள்வதில்லை. அகந்தை கொள்வதில்லை. நிறைகுடம் ததும்பாது என்பதற்கு ஏற்ப ஈட்டிய ஞானமும் செல்வமும் எவ்வளவாயினும் அடக்கத்துடன் இருக்கிறான். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...14

பண்டிதன் ஞானியருடன் பழகும் விதம் விதுரர் கூறுகிறார்-> திறமை வாய்ந்த ஞானியரிடம் இருந்து ஒரு பண்டிதன் நல்ல ஞானத்தையும் அறிவையும் கற்றுத் தெளிகிறான். தர்மத்தின் வழியில் வழுவாது அந்த ஞானத்தை பயன்படுத்தி தேவையான பொருளை அல்லது லாபத்தை / அர்த்தத்தை ஈட்டுகிறான். அவ்வாறு தனக்கான மகிழ்ச்சியை அவன் அடைகிறான். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...13

பண்டிதன் எப்படி பட்ட அறிவை வளர்த்துக் கொள்கிறான்? விதுரர் கூறுகிறார் -> ஒரு பண்டிதரின் வாசிப்புகள் முறைப்படுத்தப் பட்டதாகவும் ஒரு காரணம் அல்லது குறிக்கோளினை கொண்டதாகவும் அமைகிறது. அந்த காரணங்கள் உயர் தர்மங்கள் மற்றும் சாத்திரங்களை அடிப்படையாக கொண்டவையாக அமைகிறது. பண்டிதன் என்பவன் உயர்வானவற்றையும் நல்லவனவற்றையும் மதிக்க ஒரு பொழுதும் தவறுவதில்லை. (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...12

Image
பண்டிதன் பேச்சாற்றல் எப்படி அமைகிறது? விதுரர் கூறுகிறார் -> பண்டிதன் நல்ல பேச்சாற்றல் மிக்கவனாக விளங்குகிறான். விவாதம் அல்லது தர்க்கம் செய்யும் கலையிலும் , தர்கா சாஸ்திரத்திலும் தேர்ச்சி பெற்றவனாக, பல்வேறு நூல்கள் மற்றும் துறை சார்ந்த அறிவுகளை அடைந்தவனாக, நிபுணனாக விளங்குகிறான். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...11

Image
பண்டிதரின் தன்மை விதுரர் கூறுகிறார் -> தன் லட்சியத்திற்காக உந்தப்பட்ட பண்டிதன் பாராட்டுகளால் மனம் மகிழ்வதும் இல்லை. தூற்றல்களால் துவண்டு போவதும் இல்லை. அவன் தான் எடுத்த செயலில் கவனமுடனும் மிகவும் தெளிவான நிதானமான மனதோடு குழப்பம் இன்றியும் விளங்குகிறான் (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...10

Image
பண்டிதர் திறன் விதுரர் கூறுகிறார்-> பண்டிதன் செயல்களின் தன்மையையும் படைப்புகளின் தன்மையையும் நன்கு அறிந்தவன். ஒவ்வொரு செயல்களுக்கும் இருக்கும் தொடர்பையும் வினைகளையும் புரிந்து கொண்டவன். இலட்சியத்தை அடையும் முறைகளையும் அவற்றை செய்யும் விதத்தையும் நன்கு அறிந்து கொண்டவன். இத்தகைய ஆற்றல் மிக்கவன் பண்டிதன். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...9

Image
பண்டிதர் செயல்படும் விதம் விதுரர் கூறுகிறார் -> பண்டிதர்கள் எடுத்த செயலில் மிகுந்த ஈடுபாடு கொண்டு விளங்குவர். தனக்கான ஒரு லட்சியத்தை நோக்கி நேரத்தை விரயம் செய்யாமல், சுய கட்டுப்பாடு கொண்டு செயல்படுத்துவர். அவர்கள் எடுத்துக் கொண்ட அந்த செயல் நன்கு தெளிந்த சிந்தனைக்கு பிறகு திட்டமிடல் பிறகே துவங்கியதாய் இருக்கும் (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...8

Image
பண்டிதரின் லட்சியமும் மனோநிலையும் எப்படி பட்டதாக இருக்கிறது? விதுரர் கூறுகிறார் -> பண்டிதர்கள் தங்களால் அடைய முடியாத லட்சியங்களை கொள்வதில்லை. கடந்த காலத்தை நினைத்து வருந்துவது, தங்கள் புத்தியை குழப்ப மேகங்கள் சூழவோ அவர்கள் ஒரு பொழுதும் அனுமதிப்பதில்லை. அப்படி பட்டவர்கள் ஞானியராய் விளங்குகின்றனர். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...7

Image
பண்டிதரின் தன்மை என்ன? விதுரர் கூறுகிறார் -> பண்டிதன் எதனையும் மிக எளிதாக புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவன், எதனையும் மிகவும் நிதானமாகவும் உன்னிப்பாகவும் கவனிப்பவன், முறையான திட்டமிடலின் மூலம் தன் லட்சியங்களை நோக்கி பயணிப்பவன், சுய லாபத்திற்காகவோ அல்லது பேராசையினாலோ அவன் செயல்களில் ஈடுபடுவதில்லை, எதை பற்றியும் அவனிடம் கருத்து கேட்காத பொழுது அவன் பேசி தனது நேரத்தையும் சக்தியையும் அவன் வீணடிப்பதில்லை. இவனே ஞானம் கொண்டவனாகவும் விளங்குகிறான். (திரு அல்லிகேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம், திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...6

Image
பண்டிதரின் உத்வேகம் எப்படி இருக்கிறது? விதுரர் கூறுகிறார் -> பண்டிதன் கடுமையாக செயல்படுகிறான். அவனுக்கான உந்துதல் சக்தியும் உத்வேகமும் அவனிடமே இருக்கிறது. தன் முழு ஆற்றலையும் கொண்டு அவன் செயல் படுகிறான். எதையுமே முக்கியம் இல்லை என எண்ணி அவன் ஒதுக்குவது இல்லை. (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம், திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...5

Image
பண்டிதரின் செயல்பாட்டின் எதிர்பார்ப்புகள் என்ன? விதுரர் கூறுகிறார் -> அவன் நன்மை விளைவிக்கும் செயல்களை செய்கிறான். அதனில் வெற்றியை எதிர்பார்த்து செய்கிறான். ஆனால் அதன் மூலமாக பொருளோ சுகமோ அவன் எதிர்பார்ப்பது இல்லை. நல்ல செயல்கள் வெற்றி அடைய வேண்டும் என்பது தான் அவன் நோக்கமாக இருக்கிறது (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம், திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...4

Image
பண்டிதரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? விதுரர் கூறுகிறார் - அவன் தான் செய்து வரும் பெரும் செயல்கள் பற்றியெல்லாம் வெளியே பேசுவது இல்லை. முக்கியமாக அவன் போட்டியாளர்கள் அதனை அறிதல் இயலாது. அவன் செயல்கள் நன்மை தருவதாய் இருக்கும். செய்த பின்பே தெரிய வரும். அப்படி பட்டதாக அவன் செயல்பாடுகள் அமைகிறது (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம், திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள் ...3

Image
பண்டிதன் எப்படி பட்டவனாக இருக்கிறான்? விதுரர் கூறுகிறார் -> அவன் ஆத்திரப்படுவதும் இல்லை, அதீத ஆனந்தம் அடைவதும் இல்லை, சுய பெருமையும் அவனிடம் இல்லை, தாழ்வு மனப்பான்மையும் இல்லை, முட்டாள் போக்கும் அவனிடம் இல்லை, தன் உருவத்திலும், சாதனைகளிலும் பெருமை படுவதும் இல்லை, மேலும் நான்கு புருஷார்த்தங்கள் மீதும் பற்றுக் கொள்வதும் இல்லை. அத்தகையவன் பண்டிதன் ஆகிறான் (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம், திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...2

Image
பண்டிதரின் அடையாளங்கள் என்ன? விதுரர் கூறுகிறார் - இவையெல்லாம் ஒரு பண்டிதரின் அடையாளங்கள். நல்ல பெயரை,புகழை, நன்மையை பெற்றுத் தரும் செயல்களை விடாது செய்வது, முறையாக செய்வது, கர்மங்களை சரிவர செய்வது, தவறான அனைத்தையும் மறுப்பது, நல்லொழுக்கம், வேதம் மற்றும் நேர்மை ஆகியவற்றை சமுதாயத்திற்கு விடாது போதிப்பது , இவையெல்லாம் பண்டிதரின் அடையாளங்கள் (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்... 1

Image
பண்டிதன் என்பவன் யார்? விதுரர் கூறுகிறார் -> எவன் ஒருவன் ஆன்ம ஞானம், சுய பிரஞை , தன்னை பற்றிய தெளிவு, நிதானம், ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, செயல்படுதல் அதன் மூலமாக நல்ல பலன்களை பெறுதல், எடுத்த செயலில் பின்வாங்காது தன் நம்பிக்கையிலும் சித்தாந்தத்திலும் உறுதியோடு இருந்து பொருள் மீது ஆசையும் இன்றி இருக்கிறானோ அவனே பண்டிதன். (திரு அல்லிக்கேணி ருக்மணி வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை மன்னன் திருவடி சரணம்)