Posts

வையத்து வாழ்வீர்காள்...27

வளம் இருந்தும் இதயம் இல்லாதோர்: விதுரர் கூறுகிறார்-> அளவிட முடியாத செல்வம் இருந்த பொழுதும் அவற்றை தான் மட்டுமே அனுபவிப்பவன், நன்கு உண்டு மகிழ்பவன், நன்கு உடுத்தி மகிழ்பவன் இதயமற்ற மனிதனாகிறான் (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...26

இப்படியாக பண்டிதர்கள் மற்றும் மூடர்களின் குணங்களை பேசும் விதுரர் வளத்தினை பற்றி பேசத் துவங்குகிறார். வளம் விளையும் விதம் விதுரர் கூறுகிறார் -> வளம் என்பது நல்ல மங்களகரமான செயல்களினால் விளைவது. அப்படி விளையும் வளம் தொடர்ந்து செய்வதால் வளருகிறது. தொடர்ந்து ஒரு செயல் செய்யப் படும் பொழுது திறன் வளருகிறது. அத்தகைய திறன்களால் வளம் வேர் விடுகிறது. பிறகு நல்ல நிர்வாகத்தின் மூலமாக நிலை பெறுகிறது. (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள் ...25

மூடனின் பிரச்சாரம் விதுரர் கூறுகிறார் -> ஒரு மூடன் நல்லவர்களை நோக்கி பொய் பிரச்சாரங்கள் செய்கிறான். விஷமத்தனமான செய்திகளை பரப்புகிறான். இதன் வாயிலாக அவன் நல்லவர்களை துன்புறுத்தியதற்கான பாவத்தை சம்பாதிக்கிறான். நல்லவர்களா தாங்கள் தெரியாமல் செய்த தவறினால் சம்பாதித்த பாவங்களில் இருந்து மன்னிப்பு பெறுகின்றனர். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...18

மூடனின் ஆசை: விதுரர் கூறுகிறார் -> சாதாரணமாக ஒரு சில ஆசைகளை நாம் ஞாயமான ஆசைகள் என்று கூறக்கேட்டிருப்போம். மூடன் எதன் மீது எல்லாம் ஆசை கொள்ளக் கூடாதோ அதன் மீது ஆசை கொள்பவனாய் இருக்கிறான். ஞாயமான ஆசைகளில் அவன் மனம் செல்வதில்லை. அது மட்டும் இன்றி வலிமையானவருடன் தேவையில்லாத பகை உணர்ச்சி கொண்டு அவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்த எந்த விதமான தவறையும் செய்வதற்கு தயாராக இருக்கிறான். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...19

மூடன் காணும் நட்பு விதுரர் கூறுகிறார்-> மூடன் சரியான நண்பர்களை தேர்ந்தெடுப்பதில்லை. எவர் அவனுக்கு உண்மையாகவே நன்மையை செய்கிறாரோ அவர்களை அவன் விரோதியாகவே பார்க்கிறான். எவர் அவனோடு இருந்து கொண்டு அவர்களுக்கு தவறானவற்றை போதித்து தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறாரோ அவரை நண்பர் என கொள்கிறான். நல்ல நட்பையும் மனிதரையும் துன்புறுத்த அவன் எத்தகைய தவறான செயலையும் செய்ய தயாராய் இருக்கிறான். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...20

மூடன் செயல் திறன் விதுரர் கூறுகிறார்-> ரகசியமாக வைத்திருக்க வேண்டியவற்றை ஒரு மூடன் அப்படி வைத்திருப்பது இல்லை. எவர் ஒருவர் எதற்கு எடுத்தாலும் சந்தேகப் படுவாரோ அத்தகையவரிடம் மூடன் ரகசியங்களை கூறி விடுகிறான். குறைந்த நேரத்தில் முடிக்க வேண்டிய செயல்களுக்கு மூடன் நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறான். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

வையத்து வாழ்வீர்காள்...21

மூடனின் பேச்சு: விதுரர் கூறுகிறார்-> மூடன் அழையா விருந்தாளியாக தன்னை அழைக்காத இடங்களுக்கு செல்கிறான். தன்னை யாரும் கேட்காத பொழுதே மிக அதிகமாக பேசுகிறான்.மிக மோசமான நபர்களிடம் நம்பிக்கை கொள்கிறான்.இப்படி பட்டவன் மனிதர்களில் அடிமுட்டாள் ஆகிறான். (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)